செய்திகள் :

மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

post image

`மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' - நாதக மாநாடு

"மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம். திருமால், பெருமாள், கண்னன், நபிகள், இயேசு ஆகியோர் ஆடு மாடு மேய்த்தார்கள், கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்ற தலைப்பில் மதுரை அருகே விராகனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை, நேற்று மாலை நடத்திய ஆடு மாடுகளின் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

2000 -க்கு மேல் ஆடு, மாடுகள் பங்கேற்பு

மாநாடு மேடையின் முன்பாக அமைக்கப்பட்ட பகுதியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நாட்டின மாடுகளுடன் ஆடுகள், எருமை மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள், செம்மறி கிடாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதற்குப் பின்பாக நாம் தமிழர் கட்சியினர் அமர வைக்கப்பட்டனர். முதலில் மாநாடு தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

கொண்டுவரப்பட்ட நாட்டின மாடுகள்

ஆடு, மாடு இல்லாமல் எப்படி பால் விற்பார்கள்?

மாநாட்டில் சீமான் பேசும்போது, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தோடு ஆடு, மாடு மாநாடு நடத்தப்படுகிறது. ஆடு, மாடுகளின் எண்ணத்தை முன்னிறுத்திப் பேசுகிறேன். இந்தியாவில் தான் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறார்கள், எங்கள் ரத்தத்தை உருக்கி உங்களுக்கு பாலாகத் தருகிறோம், எங்களை நம்பித்தான் தாய்மார்கள் பிள்ளை பெறுகிறார்கள். உயிர்போகும் நிலையில் இறுதிப்பால் ஊற்றும் தாய், நம் முன்னாள் நிற்கிறார்கள்

பாலின் மூலம் பொருளாதார தற்சார்பு என பிரதமர் பேசுகிறார். இதன் மூலம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 78 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்று குடும்பத்தை அழிப்பவர்கள் பொருளாதாரம் எதில் உள்ளது எனத் தெரியாத ஆட்சியாளராக உள்ளனர். ஆவின் பால் விற்கும் அரசு, ஆடு, மாடு இல்லாமல் எப்படி பால் விற்பார்கள்? கால்நடைகளைப் பற்றி கவலையேப் படாத துறைதான் கால்நடைத்துறை.

மலையில் சென்று மேய்வதில் என்ன பிரச்சனை?

1.2 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்கள் தமிழகத்தில் உள்ளது. மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள், வானூர்தி நிலையங்கள் அமைக்கிறீர்கள். மாடுகளுக்கு உணவு இல்லை, போஸ்டரையும், நெகிழியையும் திங்கும் நிலை உள்ளது.

2009 ஆம் ஆண்டு மேகமலை, கோவை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் காப்புக்காடுகள், வனவிலங்குகள் சரணாலயம், புலிகள் காப்பாகம் என ஆடு, மாடு மேய தடைவிதித்து காடுகளை பறித்துக் கொண்டார்கள். சமவெளியில் மேயவும் இடம் இல்லை.

மலையில் சென்று மேய்வதில் என்ன பிரச்சனை? மாடுகள் இன்றுதான் மேய்கிறதா? மேய்ச்சலுகான தடை ஏற்புடையதாக இல்லை. மலையில் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றால் வன விலங்குகளுக்கு நோய் பரவும் என்கிறார்கள், எப்போது எந்த நோயை பரப்பினார்கள்? ஆற்றையும் அருவியையும் பாதுகாப்பவர்களா நீங்கள்? மண் அள்ளி விற்று வைகையை நாசம் செய்தது யார்? எம் சாண்ட் என்று மலையை உடைக்கிறீர்கள், உங்களுக்கு எதற்கு ஆறாவது அறிவு? அறிவியல், புவியியல், வேதியியல் எதற்காக படிக்கிறீர்கள்? கல்குவாரி எனக் கூறி மலைகளை உடைத்து அழிக்கும்போது வனவிலங்குகளை பற்றி கவலைப்படாத நீங்கள், மாடுகள் மேய்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு வரும் என கூறுவது கேவலம்.

மேடை முன் நிறுத்தப்பட்ட மாடுகள்

உணவுச் சங்கிலி

உங்களுடைய உணவுச்சங்கிலியை எப்படி மறந்தீர்கள்? காடுகள் புலி, சிங்கம், யானைக்கு மட்டும் தான் சொந்தமா? எங்களுக்கு சொந்தம் இல்லையா? காட்டில் இருந்த மாட்டை வீட்டிற்கு கொண்டுவந்தது ஏன்? இப்போது சட்டம் போட்டு தடுப்பது ஏன்? காடுகளை பல ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடி மக்களும், ஆயர்குடி கோன்களும்தான் பாதுகாத்து வருகின்றனர்.

முல்லை நில மாயோன், திருமாலும், பெருமாளும், கண்ணன், நபிகள், இயேசு ஆடு, மாடுகளை மேய்த்தார்கள். மேய்ப்பதை இழிவுபடுத்துவதாக நினைத்து அவர்களை இழிவுப்படுத்துகிறீர்களா? ஆடு, மாடுகள் மக்கள் வாழ்வோடு பிரிக்கமுடியாத உயிர்கள். ஆடு, மாடுகளுக்கு விழா கொண்டாடியவன் தமிழன்தான்.

மேய்ச்சல் நிலங்கள்

ரசாயன உரத்திற்காக மாடுகளை கொன்றார்கள், தீவனம் இல்லாமல் ஒழித்தார்கள். பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி என பேசுகிறீர்கள், மாடுகள் இல்லாத புரட்சி ஏது? இயற்கை வேளாண்மை, நஞ்சில்லா உணவுக்கு சாணியும், புலுக்கையும் இல்லாத உரம் எது? மாட்டுக்கு தீவனம் இல்லாமல் ஒழிப்பதற்காக ரசாயன உரம் கொண்டு வந்தனர், மண் மலடாகிறது.

சீமான்

அற்ப மாடுகள் அல்ல, அரிய செல்வங்கள். ஆடு, மாடுகள் இருக்கும்வரை நீங்கள் ரசாயான உரத்திற்கு செல்ல மாட்டீர்கள். நாட்டு மாட்டினத்தை அழிக்க ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டார்கள், போராடி மீண்டும் பெற்றோம். ஆனால், இன்னும் ஜங்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யவில்லை.

பால் புரதசத்து உள்ள முழு உணவு, பால் அதிகம் இருக்கும் நாடு பசியை சந்திக்காது. மருத்துவர்கள் பால், முட்டை. கீரை சாப்பிடுங்கள் என்பார், அது இனி எங்கிருந்து வரும்? உழவர்குடி எங்கு போற்றப்படுகிறதோ, அந்த நாடுதான் நல்ல நாடு. ஆசிரியர்களை போற்றும் நாடு அறிவார்ந்த நாடாக வளரும். தற்சார்பு பொருளாதரத்தில் முழுமையான பங்கு, வேளாண்மை சார்ந்த கால்நடை வளர்த்தலில்தான் உள்ளது. வெளிநாடுகளில் சாலைகளில் இரு புறங்களிலும் மேய்ச்சல் நிலங்கள் இருக்கும்.

எங்கள் வாழ்வியல் முறை..

நீங்கள் தண்ணீர் குடிக்கிறீர்கள் ஆடுமாடுகள் எங்கே செல்லும்? யானை, புலி எதற்காக ஊருக்குள் வருகிறது? எல்லா மாநிலங்களிலும் மேய்ச்சல் உரிமை பாதுகாக்கப்படுகிறது. 2021-ல் போட்ட தடையை் நீக்க வேண்டும். உப்பு சப்பில்லாத காரணத்தை காட்டி கொண்டு வந்த இந்த சட்டத்தை கொண்டு வந்தனர்.

எங்களுக்கு ஓட்டுரிமை தாருங்கள் நாங்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கிறோம், என்று ஆடு, மாடுகள் கோரிக்கை வைக்கின்றன.

பனையில் பால் போல வந்தால் பதறுகிறீர்கள், ஆனால் டாஸ்மாக்கில் தீர்த்தம்போல குடிக்கிறீர்கள். ஆடு வளர்ப்பது அவமானம் என்றால் ஏன் பால் குடிக்கிறீர்கள்? விவசாயிகள் தான் சிற்றூர்களின் பொருளாதாரம். வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடித்தல், பனைத்தொழில் ஈடுபடுவது குலத்தொழில் அல்ல, எங்கள் வாழ்வியல் முறை.

மாடுகள்

`தடையை மீறி மேய்ச்சலுக்கு செல்வேன்'

மலையில் ஆடு, மாடு மேய்க்க தடை போட்டால் மேய்ச்சல் நிலங்களை உருவாக்க வேண்டும். ஆகஸ்ட் 3 ஆம் தேதி நானே தடையை மீறி தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மேய்ச்சலுக்கு செல்வேன், எங்கு தடை செய்தார்களோ, எங்கு மேய்க்க சென்றவரை வனக்காவலர் தள்ளினாரோ அதே இடத்தில் மாட்டை ஓட்டிச் செல்வேன்" என்றார்.

Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமா?

Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. 2023-ல் பக்கவாதம் வந்து... மேலும் பார்க்க

`இருண்டகாலம்' - இந்திராகாந்தியை விமர்சித்த சசிதரூர்.. `இவர் எந்த கட்சி?' - கொந்தளித்த காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி-யுமான சசிதரூர் சொந்த கட்சி தலைமையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் வகையில் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்துவருகிறார். பிரதமர் மோடியை அடிக்கடி புக... மேலும் பார்க்க

``நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்ப... மேலும் பார்க்க

``139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய திமுக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியதாக அதிமுகவின் ஐ.டி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவு என்று பதிவிடப்பட்டது. அதிமுக ஐ.டி விங்கின் முழு பதிவு இதோ... தெரு நாய்களிடமும் ஊழல்... மேலும் பார்க்க

``ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்... மேலும் பார்க்க

ஓசூர்: தெரு நாய் கடித்து உயிரிழந்த இளைஞர்.. ரேபீஸ் பாதிப்பால் துயரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் (24). எம்பிஏ பட்டதாரியான இவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது. நாய் கடியை அலட்சியமாக எடுத்... மேலும் பார்க்க