இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸி.யின் கடைசி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் பிங்க் பந்து டெஸ்ட் நாளை (ஜூலை 13) இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
இந்தப் போட்டியில் ’பிங்க் பந்து ஸ்பெஷலிஸ்ட்’ எனப்படும் ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாதன் லயனுக்கு மாற்றாக இந்த முடிவு எடுக்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
எல்லாமே ஒரு ஆப்ஷன்தான். இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. குறிப்பாக பிங்க் பந்து கிரிக்கெட்டில் நாங்கள் என்ன சிறப்பானது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
2 சீசன்கள் இங்கு பிங்க் பந்தில் விளையாடினோம். இன்னும் இந்த பிட்ச் குறித்து சரியாக கணிக்க முடியவில்லை. அதனால், கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு பிறகு அணியை அறிவிப்போம் என்றார்.
பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸி. அணி 12-இல் 11 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.