சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
தனுஷ் 54 படத்தின் பூஜை விடியோ..! நாயகியாக மமிதா பைஜூ!
நடிகர் தனுஷின் 54-ஆவது படப் பூஜையின் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் - விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்பு ஜூலை 10ஆம் தேதி துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த குபேரா திரைப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் வெற்றிப் படமானது.
வணிக ரீதியாகவும் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதற்குப் பிறகு தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடிக்க உள்ளார்.
தனுஷின் 54-வது படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.
இந்நிலையில், பூஜை விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், மமிதா பைஜூ பெயர் இடம்பெற்றுள்ளது, பூஜா ஹெக்டேவின் பெயர் இல்லாததால் நாயகி யார் என்ற குழப்பம் தீர்ந்துள்ளது.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
#D54 - The Beginning
— Vels Film International (@VelsFilmIntl) July 12, 2025
Magical moments from the Pooja Ceremony of the @dhanushkraja starrer directed by @vigneshraja89.
Produced by @Isharikganesh@VelsFilmIntl.
A @gvprakash musical!@ThinkStudiosInd@alfredprakash17@thenieswar@ksravikumardir@_mamithabaiju#Jayaram… pic.twitter.com/xWvdASdkSM