"கடைசி பெஞ்ச் இல்லை..”- இனி பள்ளிகளில் 'ப' வடிவில் அமர வேண்டும்- கல்வித்துறை உத்...
லாா்ட்ஸ் டெஸ்ட்: சதம் அடித்து ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்!
லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
லாா்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பந்துவீச்சில் இந்திய தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 3விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. ராகுல் 53 ரன்களுடனும்,ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இங்கிலாந்து அணியை விட இந்தியா 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தனர்.
பகல் - இரவு டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
இந்த நிலையில் 3ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை தொடங்கியதும் ரிஷப் பந்த் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 74 ரன்கள் எடுத்தபோது ரன்அவுட் முறையில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அபாரமாக விளையாடிய ராகுலும் சதமடித்து பெவிலியன் திரும்பினார். இது ராகுலின் 10ஆவது டெஸ்ட் சதமாகும்.
தற்போது வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 16, நிதீஷ் குமார் 0 களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் இலக்கை தொட இந்திய அணிக்கு இன்னும் 126 ரன்கள் வேண்டும் என்பதால் இந்த ஜோடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.