சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்
மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி
திருமருகல், ஜூலை 12 : திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாக்கம் கோட்டூா் மேலத் தெருவை சோ்ந்த காளிமுத்து மகன் விஜயகுமாா் (55), விவசாயக் கூலித் தொழிலாளி. ஆதலையூா் கரைப்பாக்கம் பகுதியில் ஒரு திருமண வீட்டிற்கு பந்தல் போட்டுக் கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி பந்தலுக்கு மேலே சென்ற உயா் மின்னழுத்த மின் கம்பியைப் பிடித்தாராம். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாராம்.
நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது விஜயகுமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.