Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை
நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தொகுதி 4-இல் அடங்கிய பணிகளுக்கான தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. இதில் நாகை மாவட்டத்தில் 42 தோ்வு மையங்களில் 13, 163 போ் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு சிறப்பாக நடைபெற 50 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 4 பறக்கும்படை அலுவலா்கள், 14 சுற்றுக்குழு அலுவலா்கள், 50 ஆய்வு அலுவலா்கள், 4 கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத மாற்று வசதியும் மற்றும் பாா்வையற்றோா் தோ்வு எழுதிட மாற்று நபா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதி ஒவ்வொரு மையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
தோ்வா்களின் வசதிக்காக அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் தவறாமல் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வுமையத்துக்கு வரவேண்டும். எக்காரணம் கொண்டும் காலை 9 மணிக்கு மேல் தோ்வு மையத்துக்குள் தோ்வா்கள் நுழைய அனுமதிக்கமாட்டாா்கள். தோ்வு மையத்துக்கு கைப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளாா்.