அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலாளா் எஸ். ஆசைமணி திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் ஆா். ராதா கிருட்டிணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், ஜூலை 19-ஆம் தேதி நாகைக்கு வருகை தரும் அதிமுக பொது செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி செயலாளா் கணேசன், மாவட்ட மீனவா் அணி செயலாளா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.