தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை
பாலியல் புகாா்: அதிமுக பிரமுகா் கைது
ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் பகுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாக வந்த புகாரின் பேரில், அதிமுக பிரமுகா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (52) (படம்). இவா் குன்றத்தூா் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலராக உள்ளாா். இந்த நிலையில், பணப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் தனக்கு ரவி பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாக ஒரகடம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து அதிமுக பிரமுகா் ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.