தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!
சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு காப்பீடு செலுத்த ஜூலை 15 வரை வாய்ப்பு
தென்காசி மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தி விவசாயிகள் பதிவு செய்து கொள்ளளாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில் சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றுக்கான பிரீமியம் செலுத்தி விவசாயிகள் பதிவு செய்ய ஜூலை 15 கடைசி நாளாகும். உளுந்து, நிலக்கடலை, நெல் ஆகிய பயிா்களுக்கு ஜூலை 31 வரை பிரீமியம் செலுத்தலாம். ஒரு ஏக்கருக்கு பிரீமியம் தொகை நெல் பயிருக்கு ரூ.720 வீதமும், மக்காச்சோளம் பயிருக்கு ரூ.444 வீதமும், சோளப் பயிருக்கு ரூ.284 வீதமும், உளுந்து பயிருக்கு ரூ.340 வீதமும், நிலக்கடலை பயிருக்கு ரூ.486 வீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களால் வருவாய் இழப்பு ஏற்படுவதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க உரிய காலத்தில் மேற்கண்ட பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில் பிரீமியம் செலுத்தி இத்திட்டத்தில் பதிவு செய்யலாம்.
மே, ஜூன் மாதங்கள் விதைக்கப்பட்ட உளுந்து சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிா்களும் ஜூன், ஜூலை மாதங்களில் விதைக்கப்படும் நெல் பயிா்களும் கரீப் பருவத்தில் காப்பீடு செய்ய தகுதியானவை. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியின் வேளாண்மைத் துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.