டேங்கர் ரயில் தீவிபத்து! பகல் 1 மணிக்குள் கட்டுக்குள் வரலாம்!
தென்காசியில் ஜூலை18-ல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை ( ஜூலை18) காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில், 20 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள்
கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்கின்றனா். தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்தவா்கள் வரை பங்கேற்கலாம். இதில் பணி வாய்ப்பு பெற்றாலும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.
மேலும் விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.