அட்லி படத்தில் 4 தோற்றங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்?
அட்லி படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் 4 தோற்றங்களில் நடிக்க உள்ளாராம்.
புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
தற்போது, படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பில் அல்லு அர்ஜுனுடன் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்து வருகிறாராம். ஏற்கனவே, படத்தில் 5 நாயகிகள் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தாத்தா, அப்பா, 2 மகன் என 4 தோற்றங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: 4கே தரத்தில் மறுவெளியீடாகும் புதுப்பேட்டை!