பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
தலைவன் தலைவி கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்: விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
காதல் கதையாக உருவாகியுள்ள தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “தலைவன் தலைவி படத்தில் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக 70 நாள்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அது, ஒரு திருவிழாபோல் இருந்தது. தலைவன் தலைவி படத்தில் நடித்தது நல்ல அழகான அனுபவம். இப்படத்தைக் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சட்டமும் நீதியும் இணையத் தொடர் வெளியீட்டுத் தேதி!