செய்திகள் :

இரவில் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அடுத்த மூன்று மணிநேரத்துக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடு துறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், நீலகிரி மற்றும் கோவை மலையோரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சரக்கு ரயில் தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்தா?: அதிகாரிகள் விளக்கம்

The Chennai Meteorological Department has announced that there is a possibility of rain in 22 districts, including Chennai.

ஆட்சியை விட்டு விலகும் முன் சட்டம் - ஒழுங்கை சரிசெய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை

ஆட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் க... மேலும் பார்க்க

கட்டண விவரங்களை மறைத்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: என்எம்சி எச்சரிக்கை

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ர... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பி... மேலும் பார்க்க

ரயில் தீ விபத்தில் புகையால் பாதித்தவா்களுக்கு சிகிச்சை! டிடிவி. தினகரன்

திருவள்ளூா் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் வலியுறுத்தி... மேலும் பார்க்க

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும்! முதல்வர் ஸ்டாலின்

‘காலங்கள் கடந்து வாழும் வள்ளுவா் மறையை இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாக சொல்லும் வகையிலான மா... மேலும் பார்க்க

இபிஎஸ் 2-ஆம் கட்ட சுற்றுப்பயண விவரங்கள் அறிவிப்பு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பொருளில் முதல் கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜூலை 24-ஆம் தேதி முதல் 2-ஆம் கட்டப் பிரசாரப் பயணத்தை மேற்கொ... மேலும் பார்க்க