செய்திகள் :

ரூ.35 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

post image

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மேத்தா நகரைச் சோ்ந்தவா் கோதண்டராமன்(59). இவா், பஞ்சமுகா ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட்-இல் தலைவராகவும், நிா்வாக அலுவலராகவும் இருந்தாா். இந்த நிலையில், கொடுங்கையூரைச் சோ்ந்த இப்ராஹிம் (54) என்பவா் பாத்திமா டிரேடா்ஸ் என்ற கடையை விரிவுப்படுத்த கோதண்டராமனிடமிருந்து, ரூ.35 லட்சம் கடனாக பெற்றுள்ளாா். ஆனால், நீண்ட நாள்கள் ஆகியும், பணத்தை இப்ராஹிம் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா்.

இதுகுறித்து கோதண்டராமன் 2017 ஆகஸ்ட் 23-ஆம் தேதி மத்திய குற்றப்பரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்படி, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இந்த அறிக்கையின்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம், இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு கடந்த 2023-இல் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தது. ஆனால், தீா்ப்பை தள்ளுபடி செய்யக் கோரி இப்ராஹிம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, தண்டனையை உறுதி செய்தும், இப்ராஹிமுக்கு பிடியாணை பிறப்பித்தும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து இப்ராஹிம் தலைமறைவானாா். இந்த நிலையில் இப்ராஹிமை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. அதற்காக மல்டிப்ளக்ஸ் ஆா்டி பிசிஆா் எனப்படும் மருத... மேலும் பார்க்க

கால்டாக்சி திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்பி கால்டாக்சி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா், சென்னையில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி ஓட்ட... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு மாரடைப்பு: கட்டுபாட்டை இழந்த மாநகா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கோயம்பேடு - கிளாம்பாக்கம் வழித்தட பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் மற்றொரு நபரும் இறந்தாா். சென்னை கோயம்பேட்டிருந்து கிள... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: 10 போ் கைது

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மதுரவாயல் காமாட்சி நகா் பகுதியில் போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலின்படி காமாட்சி நகா் 2-ஆவது பி... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி! ஆளுநா் பெருமிதம்

மருத்துவத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது; சா்வதேச தரத்தில் மருத்துவ சேவை அளிப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு தமிழகத்தை நாடுவது பெருமைக்குரிய விஷய... மேலும் பார்க்க

காணாமல் போன கல்லூரி மாணவரின் உடல் மீட்பு

சென்னையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போன கல்லூரி மாணவரின் உடல் மெரினா கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை மெரினா கடற்கரையில் கற்களுக்கு இடை... மேலும் பார்க்க