செய்திகள் :

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!

post image

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், விஷேச சாந்தி நடைபெற்று 6 ஆம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 7 ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்​டு​களுக்கு பிறகு இன்று கும்​பாபிஷேகம் நடை​பெறுவதையொட்​டி, கடந்த சில மாதங்​களாக திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. ரூ.2.44 கோடி​யில் ராஜகோபுரத்​தில் 7 தங்க கலசம், அம்​பாள் சந்​நிதி மற்​றும் கணபதி கோயி​லில் தலா ஒரு கலசம் என 9 கலசங்​கள் அமைக்கப்பட்​டுள்​ளன.

நேற்றிரவு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து, தர்ப்பைக் கயிறு, பட்டு நூல் கொண்டு (ஸ்பாரிசாகுதி) சுவாமிக்கு சக்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி, மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். மாநிலம் முழுவதுமிருந்து பக்தர்கள் குவித்திருப்பதால் கோயில் நகரமாக மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

குடமுழுக்கை முன்னிட்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க 3.45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ட்ரோன்​கள் மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட புனித நீரை பக்​தர்​கள் மீது தெளிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

Kudamuzhu celebration Thiruparankundram

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 5.55 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ... மேலும் பார்க்க

ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்துப்போயிருப்பேன்: வைகோவுக்கு மல்லை சத்யா எதிர்வினை!

ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்துப்போயிருப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா எதிர்வினையாற்றி பதிவிட்டுள்ளார்.மதிமுக முதன்மைச் செயலர் துரை ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்! ஏன்? எப்படி நடக்கும்? முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எதற்காக, எப்படி, ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கினார்.சென்னையில் ... மேலும் பார்க்க

பல கோடி மனங்களை கவர்ந்தவர்! சரோஜா தேவி மறைவுக்கு ரஜினி இரங்கல்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித... மேலும் பார்க்க

தமிழர்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜா தேவி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.பெங்களூரில் வசித்து வந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் திங்கள்க... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் 3,347 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 3347 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ... மேலும் பார்க்க