செய்திகள் :

எம்எல்சி கோப்பையை வென்ற எம்ஐ நியூ யார்க்..! 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

post image

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பையை எம்ஐ நியூ யார்க் அணி வென்றுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் கடந்த ஜூன் 12 முதல் தொடங்கி நேற்று இரவுடன் முடிவடைந்தது.

இறுதிப் போட்டியில் எம்ஐ நியூ யார்க் அணியும் வாஷிங்டன் ஃபிரீடம் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூ யார்க் அணி 180/7 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 77 ரன்கள் எடுத்தார்.

அடுத்து பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃபிரீடம் அணி 20 ஓவர்களில் 175/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூ யார்க் அணி வென்றது.

இந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 70, க்ளென் பிலிப்ஸ் 48 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவையான போது 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூ யார்க் வீரர் ருஷில் உகார்கர் ஆட்ட நாயகனாகவும் வாஷிங்டன் ஃபிரீடம் அணியின் மிட்செல் ஓவன் தொடர் நாயகனாகவும் தேர்வாகினர்.

எம்ஐ நியூ யார்க் அணி 2-ஆவது முறையாக எம்எல்சி கோப்பையை வென்றுள்ளது.

ஆக்ரோஷமான கொண்டாட்டம், மோதல்..! முகமது சிராஜிக்கு அபராதம்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு விதிமீறலுக்காக ஐசிசி 15 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாளில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 135 ரன்கள், இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகள் தேவை: கடைசி நாளில் யார் வெல்லுவார்கள்?

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட்டின் கடைசி நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் இழப்பு, ஆஸி. 181 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2-ஆம் நாள் முடிவில் ஆஸி. 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஜமைக்காவில் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் டெஸ்ட்: 225-க்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 70.3 ஓவா்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில், ஸ்டீவ் ஸ்மித் 8 பவுண்டரி... மேலும் பார்க்க

விக்கெட் எடுத்த உற்சாகத்தில் இங்கிலாந்து வீரரை மோதிய சிராஜ்..! அபராதம் விதிக்கப்படுமா?

இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட்டில் இந்திய வீரர் முகமது சிராஜ் நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்களுக்... மேலும் பார்க்க

கடைசி 7 இன்னிங்ஸில் 6-இல் டக் அவுட்டான பும்ரா..!

இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 2018 முதல் ஜஸ்பிரீத் பும்ரா (வயது 31) விளையாடி வருகிறார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான பும்ரா இதுவரை ... மேலும் பார்க்க