வெற்றி யாருக்கு? ஜடேஜா அரைசதம்: இங்கிலாந்துக்கு 1 விக்கெட் தேவை!
நடிகரான அல்ஃபோன்ஸ் புத்திரன்!
பிரபல இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் நடிகராக அறிமுகமாகிறார்.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தற்போது, தன் 25-வது படத்தில் நடித்து வருகிறார். உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் தமிழ், மலையாளத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘பல்டி’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இப்படம் சாய் அபயங்கர் இசையமைப்பில் ஓணம் வெளீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், இதில் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் சோடா பாபு என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகப் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
நேரம், பிரேமம் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த அல்ஃபோன்ஸ் புத்திரன் நடிகரானது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: விஷால் - 35 படப்பிடிப்பு துவக்கம்!