செய்திகள் :

உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி வாங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மகன்; என்ன காரணம் தெரியுமா?

post image

சீனாவின் ஹூகான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 70 வயதான உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி ஒன்றை வாங்கிவந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹுனான் மாகாணத்தின் ஷுவாங்சிகோ டவுனில் வசிக்கும் ஒருவர், உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி வாங்கி உள்ளார்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, வாங்கிய சவப்பெட்டியில் அந்த வயதான பெண்மணியை அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார். கைவிசிறியை ஏந்தியபடி சவப்பெட்டியில் அமர்ந்திருக்கும் அவரை பதினாறு பேர் தூக்கி செல்கின்றனர்.

ஊர்வலத்திற்கு முன்னால் ஒரு இசைக்குழு இசைக்கப்பட்டது. வீட்டை அடைந்த பிறகு காணிக்கைகளுடன் ஒரு பாரம்பரிய விழா நடைபெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இது அந்த கிராமப்புறத்தில் ஒரு பாரம்பரியம் என்று கூறுகின்றனர். கிராமவாசியின் கூற்றுப்படி இது போன்ற விழாக்களை நடத்த சுமார்$ 2,800 செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்.

தாய் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று மகன் இவ்வாறு செய்ய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

சீன பாரம்பரியத்தில் ஒருவர் உயிருடன் இருக்கும் போது சவப்பெட்டி வாங்குவது அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இதற்காக உயிருடன் இருக்கும் ஒரு தாய்க்கும் சவப்பெட்டி வாங்கி அதில் மரியாதையுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் அந்த நபர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்தது, சிலர் இந்த செயலை பாரம்பரியம் என்று புரிந்து கொண்டாலும், மற்றவர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

ChatGPT உதவியுடன் 46 நாள்களில் 11 கிலோ எடையை குறைத்த யூடியூபர் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயதான யூடியூபர் கோடி குரோன் ஏ.ஐ ஆல் உருவாக்கப்பட்ட உணவு திட்டத்தின் மூலம் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்ததாக கூறியிருக்கிறார். பசிபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் மனைவி, இரண்டு கு... மேலும் பார்க்க

பாலத்தில் நின்று செல்பி; ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற மனைவி? - தப்பி பிழைத்த புதுமாப்பிள்ளை பகீர்

கர்நாடகா மாநிலம் ரெய்ச்சூரில் உள்ள சக்தி நகரை சேர்ந்த சூரஜ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் யாட்கிர் என்ற இடத்தை சேர்ந்த நீது என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இடையே சிறிய கருத்து வேறுபாடு ... மேலும் பார்க்க

'இந்திதான் பேசுவேன்' எனக் கூறிய ஆட்டோ டிரைவர்; சரமாரியாக அடித்த தாக்கரே கட்சித் தொண்டர்கள்

மும்பையில் சமீப காலமாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் வசிக்கும் வெளிமாநில மக்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று கூறி வருகிறார். இந்தி பேசாதவர்களை மக... மேலும் பார்க்க

ஒலிபெருக்கி இல்லாத மும்பை: மசூதி, வழிபாட்டுத்தலங்களில் இருந்த 1,600 ஒலிபெருக்கிகள் அகற்றம்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வரு... மேலும் பார்க்க

Skincase: மனித தோல் வடிவில் போன் கவர் உருவாக்கிய விஞ்ஞானிகள் - என்ன காரணம் தெரியுமா?

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்... மேலும் பார்க்க

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க