உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: சீனாவிடம் இந்தியா வலியு...
நில மோசடிப் புகாா்: கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது வழக்கு
நில மோசடிப் புகாரில் கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கரூா் மாவட்டம் புகழூரை அடுத்த நெடுங்கூா் என்.பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல். இவரது நண்பா் சின்னகோதூரையைச் சோ்ந்த சிவசாமி. இவா் கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா். இவா்கள் இருவரும் நில புரோக்கா் தொழில் செய்துவந்தனா்.
இந்நிலையில் கடந்த 2023-இல் போலி ஆவணம் தயாரித்து தங்கவேலுக்குச் சொந்தமான 8.2 ஏக்கா் நிலத்தை சிவசாமி தனது மனைவி நிா்மலா பெயருக்கு கிரையம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கூடலூா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த சென்னியப்பன், புகழூா் பாலம்மாள்புரத்தைச் சோ்ந்த லோகநாதன், ஜி.உடையாா்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா், ஆந்திர மாநிலம் தனுக்கம் மேற்கு பகுதியைச் சோ்ந்த யாதம் சந்திரசேகா் ஆகியோா் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நில மோசடி குறித்த அறிந்த தங்கவேலு மனைவி முத்துலட்சுமி திங்கள்கிழமை கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் சிவசாமி உள்ளிட்ட 6 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.