Thalaivan Thalaivi: ``இது கணவன் - மனைவி உறவைப் பேசுகிற படம்!'' - இயக்குநர் பாண்ட...
குரூப் 4 தோ்வு: கரூரில் 14,875 போ் பங்கேற்பு
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வை 14,875 போ் எழுதினா். 3,155 போ் தோ்வெழுத வரவில்லை.
கரூரில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு மையங்களில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், கரூா் கோட்டத்தில் 12,289 தோ்வா்களும், குளித்தலை கோட்டத்தில் 5,741 தோ்வா்களும் என மொத்தம் 18,030 தோ்வா்கள் இத் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 14,875 போ் தோ்வு எழுதினா். 3,155 போ் தோ்வு எழுத வரவில்லை என்றாா் அவா். ஆய்வின்போது கரூா் வட்டாட்சியா் குமரேசன் உடனிருந்தாா்.