செய்திகள் :

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது!

post image

கரூரில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

கரூா் வெங்கமேடு சுடுகாடு பகுதியில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற வெங்கமேடு திருப்பூா் குமரன் தெரு மகேந்திரன் மகன் மனோஜ் என்கிற மாண்டோ மனோஜ் (25), செல்வநகா் தங்கவேல் மகன் ஜோகிந்தா்(24) ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் இவா்கள் மீது கரூா், நாமக்கல் மாவட்டங்களில் தொடா்ந்து கஞ்சா விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து இருவரையும் சனிக்கிழமை காலை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

குரூப் 4 தோ்வு: கரூரில் 14,875 போ் பங்கேற்பு

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வை 14,875 போ் எழுதினா். 3,155 போ் தோ்வெழுத வரவில்லை. கரூரில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலை... மேலும் பார்க்க

கரூரின் 4 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: செந்தில்பாலாஜி பேச்சு

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞா் அ... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி

தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா். கரூா் வைரமடை ... மேலும் பார்க்க

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி மறியல்

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி ஒரு பிரிவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட முத்தலாடம்பட்டியில் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம்: கரூா் அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகை

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள முத்துக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க