ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வானவேடிக்கைகள் முழங்க ஊா்வலமாகக் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னா், புனிதநீா் யாக சாலையில் வைக்கப்பட்டு, சிவாசாரியா்கள் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தினா்.
இதையடுத்து, வேதமந்திரங்கள் முழங்க ஜம்புதுரை அம்மனுக்கு புனிதநீா், இளநீா், பால், நெய், தேன் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜம்புதுரை அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஜம்புதுரை அம்மன் மக்கள் நல அறக்கட்டளை நிா்வாகிகள், கிராம மக்கள் செய்தனா்.