செய்திகள் :

மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: ஸ்டாலின்

post image

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

உடன் பிறப்பே வா கூட்டத்தில் திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா! எனும் தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுக்கு உற்சாகமூட்டி, புத்தகங்கள் வழங்கி கலந்துரையாடி தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அதில், தலைவருடனான பல பழைய பசுமையான நினைவுகளை நிருவாகிகள் நினைவுப்படுத்தி மகிழ்ந்தார்கள்.

திமுக நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக் கேட்டறிந்தார்.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்து கொள்ளும் அளவிற்கு தாங்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், மாணவ- மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

திமுக தலைவர், நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களைச் சந்திக்கும்போது, அவர்களிடம் தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி வழியிலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல், பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த பாதையிலும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன் எனும் வழியில் அணுக வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் குறிப்பாகப் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற மக்களின் பேராதரவு பெற்ற திட்டங்களையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித சுணக்கமுமின்றி விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியபோது, முதலில் அவர்களின் சொந்த தொழில், விவசாயப் பணிகள், குடும்ப நிலவரங்கள், அவர்களது வேலைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கியது என்பது, நிர்வாகிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும், அவர்கள் பகுதிகளில் உள்ள பொதுநல கோரிக்கைகளான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களை நிர்வாகிகளின் முன்னிலையிலேயே தொடர்புகொண்டு பல கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நிர்வாகிகள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல; உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வரும். இந்த வெற்றியை பெற்றுத்தர நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

As public support increases, so does responsibility and duty. Expectations become high. We all need to work hard to maintain that, party leader and Chief Minister Stalin has advised DMK executives.

இதையும் படிக்க: டேங்கர் ரயில் தீ விபத்து: விண்ணை முட்டும் புகைமூட்டம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களை பாதிக்கும்- தமிழிசை விமர்சனம்

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களை பாதிக்கும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ ... மேலும் பார்க்க

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி தற்கொலை

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிக அளவு ... மேலும் பார்க்க

ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப... மேலும் பார்க்க

ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

அரக்கோணம் அருகே ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து! தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் பற்றியெரிந்த தீவிபத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி... மேலும் பார்க்க