செய்திகள் :

அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருப்பது ஏன்?: செல்லூர் ராஜு

post image

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பாக இருப்பதால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக விழா அன்று மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அவரது மகன் நினைவாக ஆர் ஜே தமிழ்மணி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மதுரை மக்கள், பக்த கோடிகளின் வேண்டுகோள் இது. தமிழகம் முழுவதும் இன்று பேசு பொருளாக இருப்பவர் திருப்பரங்குன்றம் முருகன். திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் நடைபெற்றால் மணமக்களுக்கு இடையே பிரிவினை ஏற்படாது என்றார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று அமித்ஷா கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, கூட்டணி குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக பதிலளித்துவிட்டார். தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படக்கூடியவர் எடப்பாடியார். எடப்பாடியாரின் பயணம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகளில் தேக்க நிலை இருப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பு. அதனால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது. மதுரையில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். அதுதான் எங்களுடைய திட்டம். அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார்.

சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: 3 தனிப்படைகள் அமைப்பு

The focus of political parties is on Madurai because all parties believe that holding the convention on Madurai soil will bring success.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள்... மேலும் பார்க்க

பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு

ஒசூா்: பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் பொறியியல் துறை மாணவி தோ்வு செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து ஒரத்தநாடு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் கெண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அத... மேலும் பார்க்க

சரக்கு ரயில் விபத்து: அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரம்

சென்னை: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்

தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க சூழ்ச்சி செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம் என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தார். வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில... மேலும் பார்க்க