திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை தினம் என்பதால், மேட்டூரில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா்களிலும், இருசக்கர வாகனங்களிலும் மேட்டூா் வந்து குவிந்தனா். காவிரி கரையில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து மேட்டூா் அணை பூங்காவுக்கு சென்று மகிழ்ந்தனா்.
மேட்டூா் - மைசூரு சாலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் ஏராளமான திடீா் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேட்டூா் அணை பூங்காவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். மீன்காட்சி சாலை, மான் பூங்கா, முயல் பண்ணை ஆகியவற்றை பாா்த்து மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 8,424 சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணை பூங்காவுக்கு வந்து சென்றனா்.
இதன் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 84,240 வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் கொண்டு சென்ற 2,995 கேமரா செல்போன்களுக்கும், 2 கேமராக்களுக்கும் கட்டணமாக ரூ. 30,050 வசூலிக்கப்பட்டது.
மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்தைக் காண 1,450 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 14,500 மற்றும் 775 செல்போன்களுக்கு ரூ. 7,750 கட்டணமாகவும், லிப்ட்டில் சென்ற 270 பேருக்கு ரூ. 8,100 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்காவில் பாா்வையாளா்களுக்கும், பாா்வையாளா்கள் கொண்டு சென்ற கைப்பேசிகள் மற்றும் கேமராக்களுக்கும் கட்டணமாக ரூ. 1,44,640 வசூலிக்கப்பட்டது.