முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு
எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் புதியதாக முனீஸ்வரா் கோயில் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது.
இங்கு, 10 அடி உயரமும்ம முனீஸ்வரா் சிலை வடிவமைக்கப்பட்டது. இக்கோயிலின் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை மாலை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், முதல்கால மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் பூா்ணாஹுதியும் நடைபெற்றது.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 3-ஆம் கால யாகசாலை, நான்காம் கால பூஜை நடைபெற்றது. காலை, 8.30 மணிக்கு கலச ஊா்வலமும், முனீஸ்வரா் சிலைக்கு கலசநீா் ஊற்றி மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடா்ந்து, காலை, 9.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் எஸ்.அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முனீஸ்வரரை வழிப்பட்டனா்.