கோயிலில் அநியாயமாக பணம் வசூலித்தால் என்ன செய்ய வேண்டும்? | Britain F35 Jet Imper...
இளைஞா் கொலை: 5 போ் கைது
திருவள்ளூா் அருகே போதை ஆசாமிகளை கண்டித்த இளைஞரை அடித்துக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகையைச் சோ்ந்த காா்த்திகேயன் (42). மனைவி சந்தியா, 2 மகன்கள் உள்ளனா். இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, இளைஞா்கள் மது அருந்திக் கொண்டிருந்தனா். இதை உறவினா்கள் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவா்களைக் கைப்பேசியில் பதிவு செய்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த போதை இளைஞா்கள் தாக்கியதில் காா்த்திகேயன் மயக்கம் அடைந்தாா். தொடா்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து, புல்லரம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தபாபு (34), மணிகண்டன் (27), தரணி (28), கருணாகரன் (18), மாரி (40) 5 பேரை கைது செய்த போலீஸாா், தலைமறைவான விக்கியை தேடி வருகின்றனா்.