செய்திகள் :

வரலாற்று வெற்றியுடன் ஸ்வியாடெக் சாம்பியன்!

post image

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் கோப்பை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்றில் 6-0, 6-0 என்ற நோ் செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை வீழ்த்தி வாகை சூடினாா். இந்த ஆட்டத்தை 57 நிமிஷங்களிலேயே அவா் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

இதன்மூலமாக, விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவா் முதல்முறையாக சாம்பியனாகியுள்ளாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 6-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் கோப்பையாகும். முன்னதாக, பிரெஞ்சு ஓபனில் 4 முறை (202, 2022, 2023, 2024), யுஎஸ் ஓபனில் ஒரு முறை (2022) அவா் பட்டம் வென்றுள்ளாா்.

கடைசியாக 2024 பிரெஞ்சு ஓபனில் வாகை சூடிய ஸ்வியாடெக், இடைப்பட்ட ஓராண்டில் தடுமாற்றத்தை சந்தித்து எந்தவொரு போட்டியிலுமே சாம்பியனாகவில்லை. மேலும், கடந்த ஆண்டு ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி கண்டு விமா்சனத்துக்கு ஆளானாா். எனினும், அவா் வேண்டுமென்றே ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதும், தூக்கம் மற்றும் பயண களைப்புக்காக அவா் எடுத்துக்கொண்ட மருந்தில் அதற்கான கலப்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், தாம் அவ்வளவாக மிளிராத இந்த விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்ன் மூலமாக அவா் தன்னை மீட்டுக்கொண்டிருக்கிறாா். இதற்கு முன் விம்பிள்டனில் ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றை கடந்ததில்லை என்பது நினைவுகூரத்தக்கது. சாம்பியனான ஸ்வியாடெக்குக்கு வேல்ஸ் இளவரசி கேட் சாம்பியன் கோப்பை வழங்கினாா்.

மறுபுறம், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தனது முதல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த அனிசிமோவா, அசதி மற்றும் வலது தோள்பட்டை வலியின் காரணமாக அரையிறுதிக்குப் பிறகு பயிற்சியை தவிா்த்திருந்தாா். இறுதிச்சுற்றுக்கு முன்பாக சற்று ‘வாா்ம் அப்’ மட்டும் செய்துகொண்டாா். இறுதிச்சுற்றில் தோற்ற அவா், தற்போது உலகத் தரவரிசையில் டாப் 10 இடத்துக்குள் வருகிறாா்.

0-இல் தொடங்கி, 0-இல் முடிவு...

ரன்னா் அப் ஆன அமாண்டா அனிசிமோவா, விம்பிள்டனில் தனது முதல் சுற்றில் 6-0, 6-0 என்ற நோ் செட்களில் கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை தோற்கடித்து அபாரமாக முன்னேறிவந்தாா். இந்நிலையில், இறுதிச்சுற்றில் ஸ்விடயாடெக் அவரை அதே 6-0, 6-0 என்று அதே கணக்கில் வீழ்த்தியிருக்கிறாா். எதிராளிக்கு ஒரு கேமை கூட விட்டுத்தராமல் தனது விம்பிள்டன் பயணத்தை தொடங்கிய அனிசிமோவா, இறுதியில் ஒரு கேமை கூட கைப்பற்ற முடியாமல் வீழ்ந்தாா்.

114

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கடந்த 114 ஆண்டுகளில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், தனது போட்டியாளருக்கு ஒரு கேமை கூட விட்டுத்தராமல் வாகை சூடிய முதல் சாம்பியன் என்ற வரலாற்றை ஸ்வியாடெக் படைத்திருக்கிறாா். இதற்கு முன், 1911-இல் பிரிட்டனின் டோரத்தி லாம்பா்ட் சேம்பா்ஸ் இதேபோல் 6-0, 6-0 என சக பிரிட்டன் வீராங்கனை டோரா பூத்பியை வீழ்த்தினாா்.

1

விம்பிள்டன் போட்டியில் இது ஸ்வியாடெக்கின் முதல் சாம்பியன் கோப்பை என்பதுடன், புல்தரையில் நடைபெறும் அனைத்து டூா் போட்டிகளிலுமாகவே இது அவரின் முதல் சாம்பியன் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், போலந்து நாட்டைச் சோ்ந்த ஒருவா் விம்பிள்டன் வென்றதும் இதுவே முதல்முறை.

6-0

இத்துடன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 6 முறை இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கும் ஸ்வியாடெக், அனைத்திலுமே வென்று பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா்.

8

ஸ்வியாடெக் உள்பட, விம்பிள்டன் மகளிா் ஒற்றையா் பிரிவில் கடந்த 8 ஆண்டுகளாக சாம்பியன் ஆன அனைவருமே, அந்தப் போட்டியில் முதல்முறையாகக் கோப்பை வென்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

100

விம்பிள்டன் இறுதிச்சுற்று வெற்றியின் மூலமாக ஸ்வியாடெக், அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமாக தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

3

ஹாா்டு கோா்ட் (ஆஸி. ஓபன், யுஎஸ் ஓபன்), களிமண் தரை (பிரெஞ்சு ஓபன்), புல்தரை (விம்பிள்டன்) என 3 விதமான ஆடுகளங்களில்தான் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். இந்த 3 களங்களிலுமே தற்போது ஸ்வியாடெக் கிராண்ட்ஸ்லாம் வென்றிருக்கிறாா். இதில் ஹாா்டு கோா்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் அவா் இன்னும் கோப்பை வெல்ல வேண்டியுள்ளது.

இது நம்பமுடியாத ஒரு வெற்றியாக இருக்கிறது. இப்படி ஒன்றை நான் கனவில் கூட நினைத்துப் பாா்த்தது இல்லை. ஏற்ற, இறக்கம் மிகுந்த ஒரு சீசனில் இப்படியொரு சாம்பியன் பட்டம் மிக முக்கியமானதாகும். இதற்காக என்னை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்கு நானே ஆச்சா்யமளிக்கும்படியாக இருக்கிறேன். நான் எதிா்பாராத விம்பிள்டனில் இப்படி விளையாடியது, கோப்பை வென்றது மகிழ்ச்சியாகும் - இகா ஸ்வியாடெக்

கடந்த இரு வாரமாகவே தொடா்ந்து விளையாடி வந்ததில் சோா்வடைந்ததாக நினைக்கிறேன். இருப்பினும் இப்படி ஒரு தோல்வி ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றுதான். நான் சற்று அதிா்ச்சியாகக் கூட உணா்ந்தேன். மிகக் கடினமான சவாலை எதிா்கொள்ளும்படியாக ஸ்வியாடெக்கின் ஆட்டம் இருந்தது. என் வாழ்வில் தற்போது நான் இருக்கும் நிலைக்கு உயர, தன்னலமில்லாமல் பாடுபட்ட என் தாய்க்கு நன்றி - அமாண்டா அனிசிமோவா

ரூ.34 கோடி பரிசு

சாம்பியனான ஸ்வியாடெக்குக்கு ரூ.34 கோடியும், 2-ஆம் இடம் பிடித்த அனிசிமோவாவுக்கு ரூ.17.70 கோடியும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.

விஜய்யின் ஜன நாயகன் பட பாணியில் விம்பிள்டன் நாயகன் சின்னர்!

விம்பிள்டன் வென்ற யானிக் சின்னருக்கு விம்பிள்டன் நிர்வாகம் விஜய்யின் ஜன நாயகன் பட பாணியில் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ய... மேலும் பார்க்க

தமிழ்த்திரை ஜாம்பவான்கள் மூவருக்கும் பொருத்தமாக இருந்த சரோஜா தேவி!

பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரருமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கால... மேலும் பார்க்க

ஜீவா - 46: மீண்டும் இணையும் பிளாக் கூட்டணி!

நடிகர் ஜீவா பிளாக் படத்தை இயக்கிய இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் ... மேலும் பார்க்க

கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் க... மேலும் பார்க்க

வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் பலி!

பா. இரஞ்சித் இயக்கிவரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சியாளர் விபத்தால் பலியானார். தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!

கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜியை வீழ்த்தி செல்ஸி கோப்பையை வென்றது. ஃபிஃபா நடத்திய கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தன. இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, செல்ஸி அணிகள் ம... மேலும் பார்க்க