``எம்.பி-யான எங்களை மதிப்பதே இல்லை" - நோந்துகொண்ட கங்கனா ரனாவத்
கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!
கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜியை வீழ்த்தி செல்ஸி கோப்பையை வென்றது.
ஃபிஃபா நடத்திய கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தன. இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, செல்ஸி அணிகள் மோதின.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் 3-0 என செல்ஸி அபார வெற்றி பெற்றது.
கோலி பால்மர் 22,30-ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ஜாவோ பெட்ரோ 43-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து முதல் பாதியில் 3-0 என முன்னிலைப் பெற்றது.
இரண்டாம் பாதியில் எவ்வளவு முயன்றும் பிஎஸ்ஜி அணியினால் கோல் அடிக்க முடியாமல் சென்றது.
இந்தப் போட்டியில் 67 சதவிகித பந்தினை பிஎஸ்ஜி தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பிஎஸ்ஜி வீரர் நெவேஸுக்கு 85-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
செல்ஸி அணி 2-ஆவது முறையாக கிளப் உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. முன்பாக 2021-இல் வென்றிருந்தது.
ஃபிஃபா நடத்திய முதல் கிளப் உலகக் கோப்பை இது என்பது குறிப்பிட்டத்தக்கது.
சாம்பியன்ஸ் லீக் மற்றும் இந்த உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த பிஎஸ்ஜிக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது செல்ஸி.