செய்திகள் :

பிடிவாரண்ட் வழக்குகள் எத்தனை நிலுவை? காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

post image

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் , ஜமுனா சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல் துறையினர், இதுநாள் வரை செயல்படுத்தாமல் இருந்துள்ளனர்.

இதேபோல பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளன. மாஜிஸ்திரேட் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்க கோர வேண்டும்.

எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை. தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன?” என கேள்வி எழுப்பிய நீதிபதி இது குறித்து, தமிழக காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் வரும் ஜூலை 23- ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், ”தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன? என்பது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜூன் 23-ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The Madras High Court has ordered the DGP and Chennai Police Commissioner to file a report on how many cases in which arrest warrants have been issued and are pending across Tamil Nadu.

இதையும் படிக்க: வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கார... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! பிரேமலதா சுற்றுப்பயணம்!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் ... மேலும் பார்க்க

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல்

மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் இன்று(திங்கள்கிழமை) காலை காலமானார்.பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வய... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேப்பனப்பள்ளியை அடுத்த பில்லன குப்பம், கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகரைச் சே... மேலும் பார்க்க

வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட... மேலும் பார்க்க

தமிழக எம்.பி.-எம்எல்ஏக்களின் ஊழல் வழக்கு: விவரங்களைக் கோரி தவெக மனு!

தமிழகத்தில் உள்ள எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை... மேலும் பார்க்க