விறுவிறுப்பான கட்டத்தில் 3-ஆவது டெஸ்ட்: இந்தியாவுக்கு 60 ரன்கள் தேவை!
ஆக்ரோஷமான கொண்டாட்டம், மோதல்..! முகமது சிராஜிக்கு அபராதம்!
இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு விதிமீறலுக்காக ஐசிசி 15 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாளில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டை 5.5ஆவது ஓவரில் எடுத்தார்.
இந்த விக்கெட் எடுத்த உற்சாகத்தில் பென் டக்கெட் முகத்துக்கு நேராகச் சென்று சிராஜ் கத்தினார்.
பின்னர், பென் டக்கெட்டின் தோள் பட்டையை மோதினார். உடன் வந்த வாஷிங்டன் சுந்தர் சிராஜை அமைதியாகக் கூட்டிக்கொண்டு வந்தார்.
இந்திய ரசிகர்கள் “டிஎஸ்பி சிராஜ்” எனக் கொண்டாடி வந்தார்கள். பலரும் விராட் கோலியின் வளர்ப்பு என பெருமிதமாகக் கூறினார்கள்.
மிகுந்த விமர்சனத்துக்குள்ளான இந்தச் செயலுக்கு ஐசிசி சிராஜின் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதத்தை அபராதமாக வித்தித்துள்ளது.
முகது சிராஜ் இந்த அபராதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், இந்த அபராதத்துடன் தகுதி இழப்புப் புள்ளி ஒன்றையும் முகமது சிராஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடைசி நாளான இன்று இந்தியா 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.