செய்திகள் :

பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!

post image

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் 11 நாள்களில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளதைக் கண்டித்துப் பேசுகையில் பீகார் நாட்டின் 'இந்தியாவின் குற்றத் தலைநகரம்' என விமர்சித்துள்ளார்.

பீகாரில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியின் (ஜனதா தளம் தலைமையில்) குண்டர்கள் ஆட்சி நடப்பதாக Gu'NDA' Raj எனக் கூறியதுடன், முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆட்சியை கவனிப்பதைவிட அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதிலேயே அதிக நேரம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

nitish kumar
nitish kumar

பீகாரில் தேர்தல் நெருங்குவதனால் அரசியல் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது ஆளும் அரசை தூக்கியெறிந்து, பீகாரைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் பிரசாரங்களைத் தொடங்கியுள்ளது காங்கிரஸ்.

ராகுல் காந்தியின் ட்வீட்டில், "பீகார் இந்தியாவின் குற்றத்தலைநகராக மாறியுள்ளது. ஒவ்வொரு சந்துகளிலும் பயம் அப்பிக்கொண்டுள்ளது. எந்த ஒரு வீட்டிலும் அமைதி இல்லை" எனப் பதிவிட்டுள்ளார்.

Gu'NDA' Raj ஆட்சியால் மாநிலத்தில். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் வன்முறையை நோக்கி தள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

NDA Alliance Bihar
NDA Alliance Bihar

"பீகார் முதலமைச்சர் தன் சீட்டுகளைப் பாதுகாப்பதிலேயே கருத்தாக இருக்கிறார். பாஜக அமைச்சர்கள் கமிஷன்களில் திளைக்கின்றனர். நான் மீண்டும் சொல்கிறேன். இந்த முறை உங்கள் வாக்கு அரசை மாற்றுவதற்காகனதல்ல, பீகாரைக் காப்பாற்றுவதற்கானது" என்றார் ராகுல்.

பீகாரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. 11 நாள்களில் 31 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் தொழிலதிபரும் பாஜக தலைவருமான கோபால் க்மேகா தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளன.

இன்று ஜூலை 14ம் தேதி அமித் குமார் என்ற 25 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த வாரத்தில் இருவேறு சம்பவங்களில் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெகுசராய் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் பிரின்ஸ் குமார் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

Gun Culture
Gun Culture

இந்த சம்பவங்கள் மாநிலத்தில் துப்பாக்கி கலாசாரம், கூலிப்படைகள் பெருகுவதாக கவலைகளை எழுப்பியுள்ளன.

இத்துடன் பாஜக தலைவர் சுரேந்திர குமார், 60 வயது மூதாட்டி ஒருவர் மற்றும் ஒரு கடைக்காரர் கொலைகள் மாநிலத்தை உலுக்கியது.

பீகாரின் குற்றப் பதிவு பணியகம் (SCRB) அளித்துள்ள தகவல்களின் படி பீகார் மாநிலத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டுமே 1,376 கொலைகள் நடந்துள்ளன. சராசரியாக மாதம் 229 கொலைகள். 2023, 2024 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே 2863, 2786 கொலைகள் நடந்துள்ளன.

தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB) தரவுகளின் படி, பீகார் தொடர்ந்து நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் டாப் 5 மாநிலங்களில் ஒன்றாக இடம்பிடித்து வருகிறது.

காஷ்மீர்: "கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை..." - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக... மேலும் பார்க்க

"இந்தி நமக்கு மூத்த தாய்; அப்துல் கலாம் பார்வையில்..." - தேசிய மொழியாக வரவேற்கும் பவன் கல்யாண்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.ஆனால், தெலுங்கு தேசம் கட்ச... மேலும் பார்க்க

வேலூர்: பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டடப் பணிகள்; சிறிய அறையில் குழந்தைகள்- பெற்றோர் அச்சம்!

வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் அருகில் அமைந்துள்ள ஊசூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழைய க... மேலும் பார்க்க

'உங்களின் நீலிகண்ணீர் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படும்!'- மல்லை சத்யாவுக்கு மதிமுக ஆசைத்தம்பி பதில்

மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்... மேலும் பார்க்க

'படத்துல லாக்கப் டெத்த நியாப்படுத்தி நடிச்சுட்டு இப்போ என்ன?' - விஜய்யை அட்டாக் செய்யும் கனிமொழி!

சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் இறப்புக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இந்நிலையில், இதற்க... மேலும் பார்க்க