செய்திகள் :

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்; போலீஸ் விசாரணை!

post image

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைப்பதற்காக, சமையலர்கள் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. மளிகை பொருட்கள் சிதறி கிடந்தன.

பள்ளி வளாகம்

மேலும் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் மேல் பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. சமையலர் தொட்டியை எட்டி பார்க்க குடிநீரில் மலம் கலக்கப்பட்டிருந்து. இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. தென்னை மரங்களில் தேங்காய்கள் பறிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து சமையலர்கள் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்தினர் பள்ளி முன் திரண்டனர். பள்ளிக்கு அதிகாரிகள் மற்றும் போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து சிலரிடம் பேசினோம், "பள்ளிக்குள் வந்த மர்ம நபர்கள் பள்ளிக்குள்ளேயே சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் தான் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து விட்டு சென்றுள்ளனர். குழந்தைகள் குடிக்கும் தண்ணியில் இப்படி செய்கிறோமே என்ற எண்ணம் கூட இல்லாமல் இதை செய்துள்ளனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு யாரும் வர மாட்டார்கள் என்பதால் மர்ம நபர்கள் துணிச்சலுடன் வந்து இதை செய்திருக்கிறார்கள் என கருதுகிறோம்.

மது போதையில் இதனை செய்தார்களா என்பது தெரியவில்லை. நல்ல வேளையாக முன்கூட்டியே மலம் கலக்கப்பட்டதை பார்த்ததால் குடிநீரை மாணவர்கள் யாரும் குடிக்கவில்லை. இதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

ஏற்கனவே வேங்கைவயலில் மலம் கலக்கப்பட்ட விவகாரமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அரசு பள்ளியில் மலம் கலந்திருக்கும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த செயல் நடந்திருப்பது பெரும் பேசு பொருளாகவும் மாறியிருக்கிறது.

குடிநீர் தொட்டியில் மலம்

இது குறித்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பள்ளியில் அனைத்து சாதியை சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர். சாதி பிரச்னையை தூண்டுவதற்காக இதை செய்தார்களா அல்லது வேறு எதுவும் காரணம் இருக்குமா என தெரியவில்லை என்றனர். போலீஸ் தரப்பிலோ, இதில் சாதிய பிரச்சனை ஏதுமில்லை, குடி போதை ஆசாமிகள் இதனை செய்துள்ளார்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்கிறார்கள்.

தஞ்சாவூர்: மனைவியின் தங்கை போலீஸில் புகார்; மாமனாரை தெலங்கானாவிற்குக் கடத்திக் கொலைசெய்த மருமகன்!

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றினார். அந்த ஹோட்டலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அர... மேலும் பார்க்க

மும்பை: குடிபோதையில் கடலுக்கு காரை ஓட்டிய நண்பர்கள்; சுற்றுலா வந்த இடத்தில் சோதனை..

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரிஜேஷ் சோனி (33), ஆந்திராவைச் சேர்ந்த நஜீப் (42) ஆகியோர் மும்பையை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் மும்பையில் உள்ள தங்களது நண்பர் யாதவ் என்பவருடன் சேர்ந்து மும்பை முழுக்க க... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த பி.ஏ.சி.எல் இயக்குநர் கைது - 5 கோடி மக்களிடம் ரூ.49,000 கோடி மோசடி செய்தது எப்படி?!

இந்தியாவில் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடுகளை பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் எத்தனையோ நடந்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது பி.ஏ.சி.எல் அக்ரோ டெக் கார்ப்ரேசன் செய்த மோசடியாகும். இந்தியாவிலேயே மிக... மேலும் பார்க்க

Sneha Debnath: ``ஒரு CCTV கேமரா கூட வேலை செய்யவில்லையா?'' - உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் கவலை

6 நாட்களுக்கு முன் காணாமல் போன டெல்லி பல்கலைக்கழக மாணவி சினேகா டெப்நாத் (Sneha Debnath), சடலமாக யமுனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார். மாணவி சினேகா திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லி பல... மேலும் பார்க்க

Sneha Debnath: 6 நாள்களுக்குப் பின் யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி.. என்ன நடந்தது?

டெல்லியில் உள்ள ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி ஸ்நேகா தேவ்நாத் (Sneha Debnath) (19) கடந்த ஆறு நாள்களாக காணவில்லை. அவரது குடும்பத்தின... மேலும் பார்க்க

கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந்தவரை மீட்ட போலீஸார்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகின்றனர். கோவையைச் சேர்ந்த பிரப... மேலும் பார்க்க