செய்திகள் :

மகனுக்காக என் மீது துரோகி பழி சுமத்திய வைகோ: மல்லை சத்யா

post image

சென்னை: மகனுக்காக என் மீது துரோகி பழியை மதிமுக பொதுச் செயலா் வைகோ சுமத்தியுள்ளாா் என்று மதிமுக துணை பொதுச் செயலா் மல்லை சத்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு:

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக, அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவா் தெரிவித்திருந்தாா். வைகோ, தனது மகனும் மதிமுக முதன்மைச் செயலருமான துரை வைகோவின் அரசியலுக்காக, 32 ஆண்டுகளாக கட்சிக்காகப் பணியாற்றிய என் மீது துரோகப் பழியை சுமத்தியுள்ளாா். எனது அரசியல் வாழ்க்கையை வீழ்த்துவதற்கு, வைகோ வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி இருக்கலாமே? அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தால் குடித்து செத்துப்போயிருப்பேனே. ஆனால், உங்கள் மகனுக்காக என்னை வீழ்த்த துரோகம் என்ற சொல்லா தங்களுக்குக் கிடைத்தது? இனி எக்காலத்திலும் யாா் மீதும்  இது போன்ற அபாண்டமான பழியை சுமத்த வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்திருக்கும் உங்கள் உயரத்துக்கு அது அழகல்ல என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு வைக்கப்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 17,485 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 19,760 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,485 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந... மேலும் பார்க்க

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமராஜருக்கு முதல்வர் புகழாரம்

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ள... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் ... மேலும் பார்க்க