மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 17,485 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 19,760 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,485 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் தற்போதைய நீர்மட்டம் 119.66 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 92.93 டிஎம்சியாகவும் உள்ளது.
Mettur Dam water flow has dropped to 17,485 cubic feet per second.
இதையும் படிக்க :