செய்திகள் :

ஜீவா - 46 படப்பிடிப்பு ஆரம்பம்!

post image

நடிகர் ஜீவாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தவருக்கு கற்றது தமிழ், ஈ, ரௌத்திரம், என்றென்றும் புன்னகை படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக ஜீவாவுக்கு சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. இறுதியாக, கடந்த 2024-ல் வெளியான பிளாக் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்த நிலையில், ஜீவா தன் 46-வது படமாக பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று (ஜூலை 14) சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், திருப்பூர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

இதையும் படிக்க: ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா டிரைலர்!

actor jiiva's 46th film shoots starts with pooja

விக்ரமின் அடுத்த படம் இதுதான்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்த... மேலும் பார்க்க

ஓவல் அலுவலகத்தில் கிளப் உலகக் கோப்பை..? புதிய சர்ச்சையில் டிரம்ப்!

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ஓவல் அலுவலத்திலேயே வைத்துக்கொள்வேன் எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் ... மேலும் பார்க்க

நடிகை பூஜிதாவுக்கு குவியும் வாழ்த்து!

தொகுப்பாளினி பூஜிதா தேவராஜ் இன்று(ஜூலை 15) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்திரா சுப்ரமணியன் இயக்கத... மேலும் பார்க்க

படை தலைவன் ஓடிடி தேதி!

நடிகர் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைப்பில் உருவா... மேலும் பார்க்க

திருமணத்துக்குப் பிறகு கணவரின் பிறந்த நாளைக் கொண்டாடிய பாவனி!

சின்ன திரை நடிகை பாவனி, திருமணத்துக்குப் பிறகான தனது கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். இதனையொட்டி உணர்வுப்பூர்வமாக அவர் பதிவிட்டுள்ளார்.திருமணத்துக்கு முன்பு காதலர்களாக பல பிறந்த... மேலும் பார்க்க

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தீரஜ் குமார் காலமானார்!

பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளருமான தீரஜ் குமார் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பழம்பெரும் பாலிவுட் மற்றும் பஞ்சாபி மொழி நடிகரும் தயாரிப்பாளருமான தீரஜ் குமார் (வயது 79)... மேலும் பார்க்க