நடிகை பூஜிதாவுக்கு குவியும் வாழ்த்து!
தொகுப்பாளினி பூஜிதா தேவராஜ் இன்று(ஜூலை 15) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திரா சுப்ரமணியன் இயக்கத்தில் தமன்னா பிரதான பாத்திரத்தில் நடித்த நவம்பர் ஸ்டோரி இணையத் தொடரில் நடித்து தன்னுடைய திரையுலக பயணத்தைத் தொடங்கியவர் பூஜிதா தேவராஜ்.
இதனைத் தொடர்ந்து இவர் தடயம், கன்னிராசி, ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். நவரசா தொடரிலும் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடரில் நடிகை பூஜிதா இணைந்துள்ளார். இவரின் வருகை தொடருக்கு வலுசேர்த்து இருப்பதுடன், ஸ்வாரசியத்தையும் கூட்டியுள்ளது.
இவர் நடிகை மட்டுமல்ல, தொகுப்பாளினியும்கூட. பிரபல பட விழாக்கள், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.
இன்று அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள், சின்ன திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சரிகம தயாரிப்பு நிறுவனமும் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது
இதையும் படிக்க: திருமணத்துக்குப் பிறகு கணவரின் பிறந்த நாளைக் கொண்டாடிய பாவனி!