செய்திகள் :

"விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் சுபான்ஷு சுக்லா" - பிரதமர் மோடி வாழ்த்து

post image

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டு, அங்கு அவர்கள் 18 நாள்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்தியரான சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டு, சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கி சாதனை படைத்திருக்கின்றனர்.

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். சுக்லாவின் குடும்பத்தினரும் லக்னோவில் அவர் தரையிறங்கும் காட்சியை பெருமிதத்துடன் கண்டு வரவேற்றனர். இந்நிலையில் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் பிரதமர் மோடி, "வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தின் மூலம், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் என்ற பெருமையை பெறும் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கிறேன். பல லட்ச மக்களை தன் அர்ப்பணிப்பாலும், தைரியத்தாலும், விடாமுயற்சியாலும் ஊக்குவித்துள்ளார்" என்று பெருமிதத்துடன் வாழ்த்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சீனா: 2 ஆண் எலிகளின் DNA மூலம் குட்டிகளை உருவாக்கிய விஞ்ஞானிகள்.. ஆராய்ச்சி சொல்வதென்ன?

சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆண் எலிகளின் DNA-க்களை எடுத்து, எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். பின்னர் இந்த எலிகள் வளர்ந்து, பெண் எலிகளுடன் சேர்ந்து குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.ஷாங்காய் ஜியாவோ டோங் பல... மேலும் பார்க்க

மனித மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்றும் AI-யை உருவாக்கும் விஞ்ஞானிகள்; எப்படி தெரியுமா?

மூளை அலைகளில் இருந்து எண்ணங்களை டிகோட் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு AI அமைப்பை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்ற AI மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர்.மருத்து... மேலும் பார்க்க

`ரைஸ் குக்கர்' கண்டுபிடித்தது யார் தெரியுமா? சமையலில் புரட்சியை ஏற்படுத்திய குடும்பத்தின் கதை!

பெரும்பாலான வீடுகளில் மின்சார ரைஸ் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரைஸ் குக்கரை பயன்படுத்துவது நோக்கம் சமையல் நேரத்தை குறைப்பதாகும். மேலும் அதுவே அரிசியை சோறாக மாற்றி சாப்பிடும் வரை சூடாக வைத்திருக... மேலும் பார்க்க