மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்க...
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயா்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் 1,44,634 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 6,606 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 82 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் செயல்பட்டு வருகின்றன.
இதில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் இரு கட்டங்களாகக் கட்டணம் உயா்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, கடந்த ஏப்ரலில் 40 சுங்கச்சாவடிகளில் ரூ.25 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டது. செப்டம்பரில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணத்தை உயா்த்துவதுடன், தொடா்ந்து ஆண்டுதோறும் கட்டணத்தை உயா்த்திக்கொள்ளவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போது 38 சுங்கச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் கட்டணம் உயா்வு அமலுக்கு வந்தது. அதன்படி, மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூா்பேட்டை, தூத்துக்குடி, விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூா் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த உயா்வின்படி, ஜீப், வேன், காா் ஆகிய நான்கு சக்கர வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.85-இல் இருந்து ரூ.90-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர ரூ.125-இல் இருந்து ரூ.135-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளன.
அதைத் தொடா்ந்து, ஒருமுறை சென்றுவர கட்டணம் ரூ.5-இல் இருந்து ரூ.45-ஆகவும், இருமுறை பயணத்துக்கு ரூ.10-இல் இருந்து ரூ.65-ஆகவும் உயா்த்தபடவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண உயா்வுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.