Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்...
மகாராஷ்டிரா: வேறொரு பெண்ணை மணக்க கர்ப்பிணி காதலி எதிர்ப்பு; காதலன் கொடூரச் செயல்; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். திடீரென மாயாகர் காணாமல் போய்விட்டார்.
அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிவிட்டு இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். கடைசியாக தனது தோழியைப் பார்க்கச் செல்வதாக பெற்றோரிடம் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.
போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு வார விசாரணைக்குப் பிறகு மாயாகரின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது அந்த போன் புனே அருகில் உள்ள கண்டாலா என்ற மலைப்பகுதியில் இருப்பதாகக் காட்டியது.

உடனே போலீஸார் அங்குச் சென்று அப்போனை வைத்திருந்த துர்வாஸ் தர்சனைப் பிடித்து விசாரித்தனர். தீவிர விசாரணையில் மாயாகரைக் கொலை செய்து பள்ளத்தில் தூக்கிப்போட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
போலீஸார் உடனே அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரித்தபோது, துர்வாஸ் தனது காதலியைக் கைவிட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்யத் திட்டமிட்டு இருந்தது மாயாகருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என்று மாயாகர் நிர்ப்பந்தம் செய்துள்ளார்.
இதனால் தனது நண்பர்கள் இரண்டு பேரின் துணையோடு மாயாகரை கண்டாலாவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப்போட்டது தெரிய வந்தது. இதையடுத்து மாயாகர் உடல் போடப்பட்ட இடத்தில் தேடி அவரது உடலைக் கண்டுபிடித்தனர்.
இக்கொலையில் துர்வாஸிற்கு உதவியை அவரது இரண்டு நண்பர்கள் விஷ்வாஸ் பவார், சுஷாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மாயாகர் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்யும்படி நிர்ப்பந்தம் செய்துள்ளார். எனவே தர்சன் தனது காதலியை கண்டாலாவிற்கு வரவைத்து கொலை செய்துள்ளார். தர்சன் கண்டாலாவில் பீர் பார் மற்றும் ஒயின் ஷாப் நடத்தி வந்துள்ளார்'' என்று தெரிவித்தார்.