TNPSC தேர்வில் அவமதிக்கும் வகையில் கேள்வி; கொதிக்கும் அய்யா வைகுண்டர் பக்தர்கள்;...
அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?
நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்பட அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.
இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏகே - 64 ஆக உருவாகும் இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாவும் நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இந்த நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏகே - 64 அனைவருக்குமான படமாகவும் அதேநேரம் வித்தியாசமாகவும் இருக்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!