"லலித் மோடியின் சுயநலம்..." - ஸ்ரீசாந்த்தை அறைந்த வீடியோ வெளியானது குறித்து ஹர்ப...
TNPSC தேர்வில் அவமதிக்கும் வகையில் கேள்வி; கொதிக்கும் அய்யா வைகுண்டர் பக்தர்கள்; பின்னணி என்ன?
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதாக கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பக்தர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு தவற்றுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அகில இந்திய அய்யா பதிகள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் இரா.ராமலிங்கத்திடம் என்ன நடந்தது எனக் கேட்டோம்.

''தமிழ்நாடு பப்ளீக் சர்வீஸ் கமிஷன் நேத்து ஒரு தேர்வை நடத்தியிருக்கு. இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வு அது. இந்தத் தேர்வுலதான் பொது அறிவு வினாக்கள் பகுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கு.
'அய்யா வைகுண்டர் குறித்த தகவல்களில் எதுவெல்லாம் சரி' என ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலாகச் சில பதில்களைத் தந்திருக்கிறார்கள்.
அடிப்படையிலேயே கேள்வி தவறானது. அதாவது அய்யா வைகுண்டர்தான் அவருடைய ஒரே நாமம். அதனால் முந்தைய அவதாரங்களின் பெயர்களைக் கூட வைகுண்டர் பக்தர்கள் உச்சரிக்க மாட்டாங்க. ஏன் எங்களுடைய புனித நூலான அகிலத் திரட்டுலயே இந்தப் பெயர்கள் இருக்காது. அதனால எங்களைப் பொறூத்தவரை இந்தக் கேள்வியே தப்பு. இருந்தாலும் பழைய வரலாறு தெரிஞ்சுக்கிறதுல தப்பில்லைங்கிறதால இதைக் கூட பொறுத்துக்கலாம்.

ஆனா இதே கேள்வியில் மொழிபெயர்க்கிறோம்கிற பெயர்ல 'முடிசூடும் பெருமாள்'ங்கிற வார்த்தையை 'காட் ஆஃப் ஹேர் கட்டிங்'னு ஆங்கிலத்துல குறிப்பிட்டிருக்காங்க.
இது ஏதோ தெரியாம நடந்ததா நினைக்கத் தோனலை. யாரோ வேணும்னே பண்ணியிருப்பாங்களோனு கூட நினைக்க தோணுது.
பல கோடிப் பேர் வணங்குகிற கடவுள் விஷயத்துல எப்படி இவ்வளவு கவனக் குறைவா இருப்பாங்க.
அதனாலதான் முதல்வர் இந்த விஷயத்துல உடனடியா தலையிட்டு தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு கேக்கறோம்" என்கிறார் இவர்.