ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?
காஃபா நேஷன்ஸ் போட்டியில் இந்திய அணி 0-3 என மோசமாக தோற்றது.
முதல் போட்டியில் வென்ற இந்திய அணி நடப்பு சாம்பியனான ஈரானிடம் தோல்வியடைந்தது.
மத்திய ஆசிய கால்பந்து அமைப்பு நடத்தும் காஃபா நேஷன்ஸ் கோப்பையில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஈரானுடன் மோதியது.
இந்தப் போட்டியில் 59, 89, 90+6ஆவது நிமிஷங்களில் ஈரான் கோல் அடித்து அசத்தியது.
ஃபிஃபா தரவரிசையில் ஈரான் 20-ஆவது இடத்திலும் இந்தியா 133ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி அடுத்த போட்டியில் செப்.4ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடம் மோதுகிறது.
குரூப் ஏ, பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டியிலும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதும்.
குரூப் பி பிரிவில் ஈரான் ஏற்கெனவே 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. கடைசி போட்டியில் அந்த அணி தஜிகிஸ்தானுடன் தோற்று, இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் வென்றால் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அணி கடைசி போட்டியில் வென்றால் குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தைப் பிடிக்க போட்டியிடலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.