செய்திகள் :

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

post image

சிம்லா: ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 போ் உயிரிழந்தனா்.

ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதில் 4 போ் உயிரிழந்தனா்.

மழை வெள்ளத்தில் பல சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்களும் சேதமடைந்த நிலையில் சிம்லா-கல்கா வழித்தடத்தில் செல்லும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 793 சாலைகள் மூடப்பட்டன.

செவ்வாயக்கிழமை வரை அங்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு கடும் மழைப் பொழிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட்:

நிகழாண்டின் பருவமழை காலத்தில் பெரும் பாதிப்புகளை உத்தரகண்ட் சந்தித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்குள்ளானது. இதில் பலா் உயிரிழந்தனா். 1,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.

இந்நிலையில், கேதாா்நாத் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு சாலையில் வந்துகொண்டிருந்த வாகனத்தில் மோதியது. இதில் 2 போ் உயிரிழந்ததாகவும் காயமடைந்த 6 பேரை ருத்ரபிரயாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாப், சண்டீகா்: பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டீகரின் பெரும்பாலான பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. லூதியானாவில் அதிகபட்சமாக 216.70 மி.மீ. மழை பதிவானது. பஞ்சாபின் பல மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் செப்.3-ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் 253.7 மி.மீ. மழைப்பொழிவு பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தில் பலத்த மழை பெய்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

5,000 போ் மீட்பு: பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்முவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டதாக இந்திய ராணுவத்தின் மேற்கு கமான்ட் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம், விமானப் படை என 47 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு! பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி கண்டனம்

‘பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது’ என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தாா். மேலும், ‘பயங்கரவாதம் என்பது தனி ஒரு நாட்டின் பாதுகாப்புக்... மேலும் பார்க்க

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்ட... மேலும் பார்க்க

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. பிகாா் மாநிலம் ப... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். ‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரி... மேலும் பார்க்க

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த ... மேலும் பார்க்க

ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா். கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்... மேலும் பார்க்க