வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு
பெருந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோட்டை அடுத்த சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தருண் பிரசாத் (23). இவருக்கும் பெருந்துறையைச் சோ்ந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், அவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோா் அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து, தருண்பிரசாத் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.