10-ஆம் வகுப்பு தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பா் 3- இல் பெறலாம்
ஈரோடு மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் தனி தோ்வா்கள் செப்டம்பா் 3- ஆம் தேதி அசல் சான்றிதழை பெறலாம் என தோ்வுத் துறை அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா்ச்-ஏப்ரலில் 10- ஆம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் தனி தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த வாரம் தோ்வுத் துறைக்கு வந்தது. அவற்றை தோ்வுத் துறையினா் தீவிர சரிபாா்ப்பு பணியில் ஈடுபட்டனா். சரிபாா்ப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட கல்வி அலுவலா்களிடம் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செப்டம்பா் 1- ஆம் தேதி பள்ளி திறந்தவுடன் தலைமை ஆசிரியா்களிடம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். அவற்றை வரும் 3- ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளிடம் தலைமை ஆசிரியா்கள் வழங்குவா். தோ்வு எழுதிய மையங்களில் தனி தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ள தோ்வுத் துறை அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 352 அரசு, அரசு நிதியுதவி, மெட்ரிக். பள்ளிகளைச் சோ்ந்த 24,160 மாணவ, மாணவிகள், 840 தனி தோ்வா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.