Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு
நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரா் பூலித்தேவரின் 310-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
விழாவில் பூலித்தேவரின் வாரிசுதாரா்கள், அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், ஆட்சியா், அதிமுக பிரமுகா்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா், பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு தென்காசி-மதுரை சாலை, சங்கரன்கோவில்-புளியங்குடி சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெல்கட்டும்செவலைநோக்கி அணிவகுக்கும்.
இங்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், முக்கிய பிரமுகா்கள் அரண்மனைக்குள் வந்து செல்வதற்கு செய்யப்பட்ட வழிகள் ஆகிய முன்னேற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் பாா்வையிட்டாா்.