Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்ற...
Rain Alert: "செப்டம்பரில் இங்கெல்லாம் அதிக மழை பெய்யும்" - வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?
தெற்கில் மழை, மேற்கில் வெள்ளம் என்று ஏற்கெனவே இந்தியாவில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது.
இந்த செப்டம்பர் மாதம் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
"2025-ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், வழக்கத்தை விட, அதிகமாக மழை இருக்கும்.
அதாவது சராசரி மழை அளவான 167.9 மில்லி மீட்டரில் 109 சதவிகிதத்தை விட மழை அதிகமாக இருக்கும்.
பெரும்பாலான இந்தியப் பகுதிகளில் சராசரியிலிருந்து சராசரிக்கு அதிகமாக மழை பெய்யும்.
எந்தெந்த பகுதிகள் விதிவிலக்கு?
இருந்தும், சில பகுதிகளில் சராசரிக்குக் குறைவாகவே மழை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை...
இந்தியாவின் வடகிழக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதிகள் சராசரியிலிருந்து சராசரிக்கு அதிகமான மழை பெய்வதிலிருந்து விலக்காகிறது.
பகல் நேரங்கள் எப்படி இருக்கும்?
பகல் நேரங்களில் மத்தியில் இருக்கும் மேற்கு, வட மேற்கு, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் சராசரியிலிருந்து சராசரிக்கும் குறைவாக வெப்பநிலை இருக்கலாம்.
மத்தியில் இருக்கும் கிழக்குப் பகுதி, கிழக்கு மற்றும் வட கிழக்கு இந்தியா, சில வட மேற்கு பகுதிகள், மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சராசரியை விட அதிகமாக வெப்பநிலை இருக்கும்.
இரவு நேரங்கள் எப்படி இருக்கும்?
பெரும்பாலான பகுதிகளில் சராசரி மற்றும் சராசரிக்கு மேலாக வெப்பநிலை இருக்கும்.
வடமேற்கு மற்றும் தீவிர தென்னிந்தியாவில் சராசரிக்குக் கீழாக வெப்பநிலை இருக்கும்.

விளைவுகள் என்ன?
அதிக மழை விவசாயத்திற்கும், நீர்நிலைகளுக்கும் மிகவும் உதவும்.
ஆனாலும், வெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து நெரிசல், நோய்த் தொற்றுகள் ஏற்படலாம்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, தென்னிந்தியாவிற்குப் பெரும் பாதிப்பு கிடையாது என்று தெரிய வருகிறது.