கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு...
சத்தீஸ்கர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்
திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவருக்குத் திருமணம் முடிந்து பவித்ரா (40) என்ற மனைவியும், சௌஜைன்யா (7) மற்றும் சௌமையா (4) என இரு மகள்கள் இருக்கின்றனர்.
ராஜேஷ் குமார் சத்தீஸ்கர் மாநிலத்தின் ரயிபூரில் ஒப்பந்தக்காரராகப் பணிபுரிந்து வந்தவர், குடும்பத்துடன் சத்தீஸ்கரிலேயே வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலாவுக்குப் புறப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் ராஜேஷ் குமார் குடும்பத்துடன் சென்ற கார் அடித்துச் செல்லப்பட்டது.
காரில் சிக்கியிருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர். காரில் இருந்த ஓட்டுநர் லாலா யாதுவால் மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினார்.
அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
மீட்புக்குழுவினர் 18 மணி நேரம் தொடர்ச்சியாக முயற்சி செய்து காரையும் நான்கு உடல்களையும் மீட்டனர்.