காதலின் தோல்வியால் விளைந்த அறத்தின் வெற்றி! - பொற்சுவையின் தியாகம்| #என்னுள்வேள்...
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தளம் மூடல்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்துவருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் சுற்றுலா தளம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 22ம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கோவை குற்றாலம் தற்பொழுது மீண்டும் கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இடம் வெள்ளப்பெருக்கு காரணமாகத் தற்காலிகமாக இன்று மூடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கருத்தில் கொண்டு வனத்துறைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு சீரான பின்னர் சுற்றுலாப் பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.